ஆன்லைன் லாட்டரி வியாபாரம் செய்தஒருவர் கைது

கோவை செப்டம்பர் 23 கோவை குனியமுத்தூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மருதாம்பாள் நேற்று குனியமுத்தூர,அனைமார் நாயக்கர் வீதியில் ரோந்து சுற்றி வந்தார் அப்போது அங்கு ஒருவர் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட் மற்றும் ஆன்லைன் லாட்டரி வியாபாரம் செய்தது தெரிய வந்தது..இதை யடுத்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் குனியமுத்தூர் இடையர்பாளையம், சர்ச் வீதியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 53) என்பது தெரியவந்தது. இவரிடமிருந்து பில், புக் ,நோட்புக் ,கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகள், ரு 4,680பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.