தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டிபணம் கொள்ளை. 2 பேர் கைது

கோவை அக்டோபர் 6 கோவை துடியலூர் பக்கம் உள்ள ஜி .என். மில், நஞ்சை கவுண்டன் புதூர்,மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் ( வயது 49) கூலித்தொழிலாளி.இவர் நேற்று முன்தினம் இரவில் வேலை முடித்து சம்பள பணத்தை வாங்கிக் கொண்டு சைக்கிளில் உடையாம்பாளையம் மாநகராட்சி பள்ளிக்கூடம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது இவரை 2பேர் வழிமறித்தனர்.அவரை கத்தியை காட்டி மிரட்டி சட்டைப் பையில் இருந்த ரூ 4,120சம்பள பணம்மற்றும் செல்போன் ஆகிவற்றை பறித்து விட்டு தப்பி சென்று விட்டனர். இது குறித்து கார்த்திகேயன் துடியலூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் லதா வழக்கு பதிவு செய்து கணபதி நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ( வயது 25) ரத்தினபுரி சண்முகா நகரை சேர்ந்த அருண்குமார் ( வயது 24) ஆகியோரை கைது செய்தார் .அவர்களிடமிருந்துபணம் ரூ 3 ஆயிரம் மீட்க்கப்பட்டது..இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.