நீலகிரி மாவட்ட முள்ளிமலை கிராம பகுதியில் அரசுக்கு சொந்தமான பொது மைதானத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது ஏழு மணுக்கள் கொடுத்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை தாமதம்??

நீலகிரி மாவட்டம் முள்ளிமலை கிராமத்தில் 250க்கு மேலான குடும்பங்கள் வசிக்கின்றனர், இங்கு பொதுமக்கள் அனைத்து விழாக்கள் பயன்படக்கூடிய பொதுமைதான உள்ளது, இங்கு வசிக்கும் தனிநபர்கள்
லட்சுமணன் மற்றும் சுதாகரன் ஆகிய சகோதரர்கள் இருவரும் மக்கள் பயன்படக்கூடிய பொது மைதான இடங்களை ஆக்கிரமித்துள்ளனர், மற்றும் சுரேஷ் என்பவர்
அவரது வீட்டிற்கு வழங்கப்பட்ட பட்டா நிலத்திற்கு மீறி ஆக்கிரமிப்பு செய்து பாதுகாப்பு சுவர்
எழுப்பியுள்ளார் என ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர், சுதாகரன் என்பவர் அதற்கு அருகில் உள்ள அரசு நிலம்
பொது மைதானத்தை ஆக்கிரமித்து எந்த ஒரு ஆவணமும் இன்றி
கட்டிடம் எழுப்பி அடிதளம் அமைத்து பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது, அதுமட்டுமின்றி அதற்கு அருகில் அரசு
நிலத்தை ஆக்கிரமித்து வேலியும் அமைத்துள்ளார். இது சம்மந்தமாக ஏப்ரல்
மாநம் 2024 அன்று வட்டாட்சியரிடம் ஊர் பொதுமக்கள் அனைவரின் சார்பாக
ஆட்சேபனை மனு அளித்தோம். இது சம்மந்தமாக வட்டாட்சியர் மற்றும் கிராம
நிர்வாக அலுவலர் ஆய்வு மேற்கொண்டு பிறகு 14-07-2024 அன்று 7th (ஏழாவது)
நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதற்கு பிறகு எந்தவித நடவடிக்கையும்
இல்லாததால் சுதாகரன் என்பவர் 70% கட்டிடம் எழுப்பி முடித்து விட்ட
நிலையில் வருவாய் கோட்டாட்சியரிடம் முறையிட்டோம். அதற்கு எந்த ஒரு
நடவடிக்கையும் இல்லாததால் மேலும் மாவட்ட வருவாய் அலுவலரிடம்
முறையிட்டோம். நடவடிக்கை மேற்கொள்ள தாமதனாதால் 19–12-2024 அன்று
நீலகிரி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்திக்க ஊர் மக்கள் அனைவரும்
அலுவலகத்திற்கு வந்து முறையிட்டோம். பிறகு மீண்டும் பிப்ரவரி 2025 ஊர் பொது மக்கள் அனைவரும் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு
அளித்தபொழுது தாங்கள் ஆக்கிரமிப்பு கட்டிடம் மற்றும் பாதுகாப்பு சுவரை
எவ்வித அரசு ஆணை இல்லாமல் கட்டப்பட்டதால் ஆக்கிரமிப்பு பாதுகாப்பு சுவர் மட்டும் அகற்றப்பட்டது, அதற்கு ஊர் பொதுமக்கள் அனைவரின் சார்பாக மாவட்ட ஆட்சியருக்கு
நன்றி தெரிவிக்கப்பட்டது, மேலும் அப்பகுதியில் வசிக்கும் சுதாகர் எழுப்பிய கட்டிடத்தின் மீது இதனால் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, இது குறித்த புகரை சுமார் நான்கு மாத காலமாக வட்டாட்சியர் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரிடம் பலமுறை நேரில் சென்று முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால், கிராமப் பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது, இதனால் மீண்டும் கிராம மக்கள் 4- 3 -2025 அன்று ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு புகார் மனுவை அளித்தோம், மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் உடனடியாக குந்தா வட்டாட்சியரை அழைத்து பொதுமக்கள் பயன்படக்கூடிய பொது மைதானத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடத்தை 1வார காலத்திற்குள் அகற்றும்படி உத்தரவிட்டார், ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது அரசாங்கத்தின் மத்தனப் போக்கை வெளிப்படுத்துகிறது, இந்த மனு கொடுக்க பலமுறை ஊர் தலைவர் பொதுமக்கள் ஒன்று கூடி 16 மாத காலமாக அதிகாரிகளை சந்திக்க பயணம் செய்து நடந்து சென்றதால் மன உளைச்சல், உடல் உழைப்பு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது என்று வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர், மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்ததாவது ஆக்கிரமிப்பு கட்டிடத்தையும் ஆக்கிரமித்த நிலங்களையும் பெற்றுத் தர தாங்கள் உடனடியாக உத்தரவு பிறப்பிக்குமாறு ஊர் பொதுமக்கள் சார்பாக மனு வழங்கிய உள்ளனர், தொடர்ந்து நடவடிக்கை எடுக்காமல் தாமதித்து வரும் நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் மீது முள்ளிமலை கிராம மக்கள் சார்பாக தமிழக முதல்வருக்கு மனு வழங்கப்படும் என்று பகிரங்கமாக தெரிவித்தனர்,?