வேலை செய்த வீட்டில் ரூ 16 லட்சம் நகை திருடிய தச்சு தொழிலாளி கைது

கோவை செப்டம்பர் 13கோவை சுந்தராபுரம் மதுக்கரை ரோடு பழனியப்பா லே- அவுட்டைசேர்ந்தவர் டேனியல். இவரது மகன் கேவின் (வயது 32 )இவர் தனது வீட்டை கடந்த 6 மாதமாக புதுப்பித்து வருகிறார்.இதற்காக தொழிலாளிகள் அங்கு வேலை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் அவரது வீட்டில் பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகள் பணம் ரூ 80 ஆயிரம் ,மற்றும்வெள்ளிப் பொருட்கள் காணாமல் போனது.இதுகுறித்து கெவின் சுந்தராபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கன்னையன் வழக்கு பதிவு செய்து அந்த வீட்டில் கதவு ஜன்னல் கட்டில் பீரோ மற்றும் மரத்தாலான உள் அலங்கார வேலைசெய்து வந்த சுந்தராபுரம் ,காமராஜ நகரை சேர்ந்த தச்சு தொழிலாளியான மாதவன் (வயது 36) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தார்.விசாரணையில்அவர்தான் இந்த திருட்டை நடத்தியது என்பது தெரியவந்தது .இதை யடுத்து அவரை போலீசார் நேற்று கைது செய்தனர் நகை மற்றும் பணம் மீட்கப்பட்டது. அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில அடைக்கப்பட்டார் வேலை செய்து வந்த வீட்டில் கைவரிசை காட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும்ப பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.