கோவை அருகே தொழிற்சாலையில் 1612 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு

கோவை ஆகஸ்ட் 16கோவை மற்றும் ஈரோடு ஆகிய மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட429 கஞ்சா வழக்குகளில் சுமார் 1612.166 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.போதை பொருள் அழிப்பு குழு தலைவரான கோவை சரக டி. ஐ.ஜி.
சசிமோகன், மற்றும் போதை பொருள் அழிப்பு குழுவினர் முன்னிலையில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா முழுவதும் நீதிமன்ற உத்தரவின் படி செட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் தீயிட்டு அழிக்கப்பட்டதுஇதில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர்,கலந்து கொண்டனர்.