மாடியில் இருந்து தவறி விழுந்து கட்டிட தொழிலாளி பலி

கோவை அக்டோபர் 10 திண்டுக்கல் மாவட்டம், செங்குறிச்சி ஆலம்பட்டியைச் சேர்ந்தவர் லட்சுமணன் ( வயது 42) கட்டிட தொழிலாளி.இவர் கோவை ராமநாதபுரம் புலியகுளம், ராமசாமி நகரில் குடும்பத்துடன் தங்கி உள்ளார். ஆவராம்பாளையம் காமதேனு நகரில் ஜெயபானு என்பவரது வீட்டில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார் . நேற்று வேலை செய்து கொண்டிருக்கும் போதுதிடீரென்று கீழே தவறி விழுந்தார் .இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காகமதுரை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார் .இது குறித்து அவரது மனைவி ஹரி அம்மாள் பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.