கோவையில் 7 மாதங்களில் 198 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அதிகரிப்பு. கோவை செப்டம்பர் 2 கோவை மாநகர பகுதியில் 24 மணி நேர ரோந்து திட்ட போலீசார் மோட்டார் சைக்கிள் திருட்டை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 7மாதங்களில் மட்டும்கோவை மாநகர வடக்கு பகுதியில் 135 மோட்டார் சைக்கிளும், தெற்கு பகுதியில் 63 மோட்டார் சைக்கிளும் மொத்தம் 198 மோட்டார் சைக்கிள் திருடப்பட்டு உள்ளது. அதில் வடக்கு பகுதியில் 53 மோட்டார் சைக்கிள்கள் ,தெற்கு பகுதியில் 34 மோட்டார் சைக்கிள்கள் என மொத்தம் 87 மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுதிருட்டு ஆசாமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு வடக்கு பகுதியில் 390 மோட்டார் சைக்கிள்கள் ,தெற்கு பகுதியில் 209 மோட்டார் சைக்கிள் என மொத்தம் 599 மோட்டார் சைக்கிள் திருடபட்டது .அதில் 252 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டது .மாநகர பகுதியில் 24 மணி நேரம் ரோந்து திட்டம் தீவிர படுத்தப்பட்டுள்ளதால் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு உட்பட அனைத்து குற்றங்களும் குறைந்துள்ளன. இருந்தபோதிலும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது அதிகரித்து இருக்கிறது .வீட்டில் இருப்பவர்கள், ஆசிரியர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். அதை தடுக்க நடவடிக்கை எடுப்பதுடன் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது .இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.