வீட்டில் 80 கிலோ குட்கா பதுக்கி வைத்தவர் கைது

கோவை செப்டம்பர் 19 கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜுன்குமார், சப் இன்ஸ்பெக்டர் சுபாஷினி ஆகியோர் நேற்று அங்குள்ள கருப்பராயன்பாளையம், மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை நடத்தினார்கள் .அங்கு தடை செய்யப்பட்ட 80கிலோ புகையிலைப் பொருட்கள் ( குட்கா ),பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அங்கிருந்த ஸ்கூட்டரும் கைப்பற்றப்பட்டது இது தொடர்பாக இதை பதுக்கி வைத்த வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் விஜயகுமார் ( வயது 45 )கைது செய்யப்பட்டார் .இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.