மின்கம்பத்தில் ஆட்டோ மோதி 3 பயணிகள் படுகாயம்

கோவை கோவை செப்டம்பர் 22 கோவை வடவள்ளி ரோடு, காளப்பநாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று வேகமாகச் சென்ற ஒரு ஆட்டோதிடீரென்று நிலை தடுமாறி ரோடு ஓரத்தில் உள்ள மின்கம்பத்தில் பயங்கரமாக மோதியது இதில் ஆட்டோவில் பயணம் செய்த காளப்பநாயக்கன்பாளையம், ராமசாமி நகரை சேர்ந்த ராஜேந்திரன் ( வயது 50) ராமசாமி ( வயது 55) கார்த்திகேயன் ( வயது 31 )ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கோவை மேற்கு பகுதி போக்குவரத்து பு ல னாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது.சப் இன்ஸ்பெக்டர் ராஜா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக காளப்பநாயக்கன்பாளையம், திருவள்ளுவர் நகரை சேர்ந்தஆட்டோ டிரைவர் செந்தில்குமார் ( வயது 49 ) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.