கோவை செப்டம்பர் 17 சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஆயுத பூஜை மற்றும் தீபாவளிபண்டிகையையொட்டி போத்தனூர் – சென்னை இடையே சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல் போத்தனூர் வாராந்திர சிறப்பு ரயில் எண் ( 06 123)வியாழக்கிழமை தோறும் வருகிற 25-ம் தேதி முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 23ஆம் தேதி வரை (5 சேவைகள்) இயக்கப்பட உள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11. -50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8-30 மணிக்குபோத்தனூர் வந்தடையும். போத்தனூர் – சென்னை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயில் (எண் 06 124)வெள்ளிக்கிழமை தோறும் 26 -ஆம் தேதி முதல் அடுத்த மாதம் அக்டோபர் 24 -ஆம் தேதி வரை ( 5 சேவைகள்)போத்தனூரில் இருந்து மாலை 6 – 30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3 15 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும். இந்த ரயில் திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை சேலம், ஈரோடு திருப்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0