டாஸ்மாக் கடையில் நள்ளிரவில் மது விற்ற ஊழியர் கைது

கோவை செப்டம்பர் 8 கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் நேற்றுநள்ளிரவில் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை (எண் 1701)பகுதியில் சுற்றி வந்தனர் அப்போது அங்கு மது பாட்டில்களை பதுக்கி பதுக்கி வைத்து கள்ள சந்தையில் அதிக விலைக்குவிற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து 32 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன .இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை , அரசூரைச் சேர்ந்த பார்ஊழியர் ஆறுமுகம் ( வயது 40) கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.