இயக்குனர் பா. ரஞ்சித் -பாடகி இசைவாணி மீது போலீசில் புகார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் அனைத்து அய்யப்ப பக்தர்கள் சங்க தலைவர் செல்வகுமார் மற்றும் பக்தர்கள் ஒரு புகார் மனு கொடுத்துள்ளனர் .அதில் கூறியிருப்பதாவது:- நீலம் கலாச்சார மையம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் பாடகி இசைவாணி ஒரு பாடலை பாடியுள்ளார். அதில் அவர் அய்யப்ப விரத முறைகளை கொச்சைப்படுத்தும் விதமாகவும், பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையிலும் வரிகள் உள்ளது. எனவே அந்தப் பாடலை பாடிய பாடகி இசைவாணி மீதும் அதை வெளியிட்ட நீலம் கலாச்சாரம் மைய நிர்வாகத்தினர் மற்றும் இயக்குனர் பா. ரஞ்சித் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.