புதிய தமிழகம் கட்சியின் சார்பில் அனைத்து மாவட்டங்களில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதுவரை 14 மாவட்டங்களில் கூட்டம் நடைபெற்று உள்ளது. இன்று காலை திருச்சியிலும், மாலை கரூரிலும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக 69 சதவித இட ஒதுக்கீடு அமல் படுத்தப்பட்டு உள்ளது.
அதில் 18 சதவிதம் பட்டியலின பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.ஆனால் ஆட்சிக்கு வரும் அரசுகள் அதனை செய்ய தவறி விட்டது. 2001ல் அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி உள் ஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு மூன்று சதவீதம் உள் ஒதுக்கீடு அறிவித்தார். இதன் மூலம் அருந்ததியின சமுதாயத்தினர் மட்டும் பலன் அடைந்தனர். மாறாக தேவேந்திரகுல வேளாளர் மற்றும் ஆதிதிராவிடர் பயனடைய முடியவில்லை.
இந்த பட்டியல் இனத்தில் 71 பிரிவுகளுக்கும் சரிசமமாக மூன்று சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம்.மேற்கண்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருச்சியில் வருகின்ற மே 14ஆம் தேதி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை மாற்றி புதிய ஆட்சியை கொண்டு வர வேண்டும் .இந்த சட்டமன்றத் தேர்தலில் ஒற்றைக் கட்சி ஆட்சியை அகற்றிவிட்டு ஒத்த கருத்துடைய அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டணி ஆட்சியை கொண்டுவர வேண்டும்.
ஒற்றைக் கட்சி ஆட்சி என்று சொல்பவர்கள் 2026 இல் புறக்கணிக்கப்படுவார்கள்.மத்திய அரசு எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வருவதற்கு முன்பு அந்தந்த மாநிலங்களில் பொதுமக்களிடம் கருத்து கேட்டு ஒப்புதல் வாங்கி சட்டத்தை கொண்டு வர வேண்டும்.தற்பொழுது மத்திய அரசின் மும்மொழி புதிய கல்விகொள்கையை திமுக அரசு இந்தியை மத்திய அரசு திணிக்கிறது என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள்.இதற்கு மத்திய அரசு சரியான விளக்கத்தை சொல்லவில்லை.
திமுகவில் உள்ள அமைச்சர்கள் நிர்வாகிகள் அனைவரும் தங்களுடைய குழந்தையை மும்மொழி அமல்படுத்தப்படும் பள்ளியில் படிக்க வைத்து விட்டு மாநகராட்சியில் படிக்கும் ஏழை மக்களை மும்மொழி கொள்கைகல்வி கற்க கூடாது என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்.இதுதான் சமூக நீதியா பெரியார் அண்ணா வழியா என்று கூறினார்

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0