கோவை ஆகஸ்ட் 11 கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ரங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் பிரதீப் ( வயது 18 )அதே பகுதியை சேர்ந்தவர்கள் கார்த்திக் ( வயது 20) அர்ஜுன் ( வயது 28) இவர்கள் 3 பேரும் சமத்துர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரிடம் பகுதி நேர டிரைவர்களாக வேலை பார்த்து வந்தனர் .இந்த நிலையில் டிரைவருக்கான சம்பள பணத்தில் ஒரு பகுதியை மாரிமுத்து கொடுக்காமல் நிறுத்தி வைத்திருந்தார் .இது குறித்து பிரதீப் உட்பட 3 பேர் மாரிமுத்துவிடம் சம்பளபணத்தில் தலா ரூ 2ஆயிரம் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாரிமுத்து முழு தொகையும் கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார். அவருடைய மகன் நடராஜனும் சேர்ந்து கொண்டு அவர்களை திட்டினாராம். பின்னர் மாரிமுத்துவும் அவருடைய மகன் நடராஜனும் சேர்ந்து கிரிக்கெட் மட்டையால் 3 பேரையும் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் பிரதீப் , கார்த்தி, அர்ஜுன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்கம் பிரதீப் இறந்தார் .இது தொடர்பாக கோட்டூர் போலீசார் மாரிமுத்து அவரது மகன் நடராஜ் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0





