கோவை விமான நிலையத்தில் ரூ .37 லட்சம் மதிப்புள்ள டிரோன்கள்

சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் . 5 பேர் சிக்கினர்.கோவை ஆகஸ்ட் 19 கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து சார்ஜா, அபுதாபி சிங்கப்பூர் ஆகிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.இந்த விமானங்களில் தினமும் 1000க்கும் மேற்பட்ட பயணிகள் சென்று வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து கோவைக்கு வரும் விமானங்களில் கடத்தி வரப்படும் டிரோன்கள், இ-சிகரெட்டுகள்மற்றும் உயர்ரக கஞ்சா போன்ற பொருட்களை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள்.. அதன்படி கோவை விமான நிலையத்திற்கு நேற்று காலை சார்ஜாவிலிருந்து ஒரு விமானம் வந்தது. அதில் இருந்து வெளியே வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சிறப்பு ஸ்கேன் கருவி போலும் சோதனை செய்தனர் .இதில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த 5பேரின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் 856 சிகரெட் பாக்கெட்டுகள், 10 டிரோன், 36 மைக்ரோ போன்களை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் திருவாரூரைச் சேர்ந்த அப்துல் ரஹீம், தூத்துக்குடியைச் சேர்ந்த சையத் சித்ராஜ்தீன்,சிவகங்கையை சேர்ந்த ஜெய்னுலாபுதீன், முகமது அப்சல்,திருச்சியை சேர்ந்த முகமது சித்திக் என்பது தெரிய வந்தது இதைத்தொடர்ந்து சிகரெட் பெட்டிகள், டிரோன் ,மைக்ரோபோன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இவைகளின் மொத்த மதிப்பு ரூ. 37 லட்சம் இருக்கும். அவர்கள் எங்கிருந்து கடத்தி வந்தார்கள்? இதன் பின்னணியில் வேறு யாரும் உள்ளனரா? விற்பனை செய்வதற்காக கடத்தி வந்தார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்