முதியவர் படுகாயம். கோவை அக்டோபர் 22 கோவை காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்துக்குநேற்று இரவு அரசுடவுன் பஸ் வந்தது. அப்போது அந்த பஸ் திடீரென்று பஸ் நிலையத்துக்குள் வேகமாக தாறுமாறக ஓடியது .இதனால் பஸ் நிலையத்தில் இருந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். பின்னர் அந்த பஸ் அங்கு நின்றிருந்த அரசு பஸ்கள் மீது மோதியது. இதில் 4 பஸ்கள் ஒன்றோடு ஒன்றாக மோதி சேதமானது .இந்த விபத்தில் ஒரு இளம்பெண் மற்றும் முதியோர் என பஸ்சுக்கு அடியில் சிக்கிக் கொண்டனர் இதனால் அவர்களின் உடல் நசுங்கி படுகாயம் ஏற்பட்டது இது குறித்து தகவல் அறிந்ததும் மாநகரக் கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய் வுபோலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் காயம்அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அந்த இளம் பெண் உயிரிழந்தார். அவர் யார் ?என்பது குறித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் கடலூரை சேர்ந்த ஹரினி ( வயது 19) என்பதும் கோவையில் உள்ள தனியார் கல்லூரி பி.காம். இரண்டாம் ஆண்டுபடித்து வந்ததும் ,படுகாயம் அடைந்த முதியவர் கோவையை சேர்ந்த சுந்தர்ராஜன் (வயது 76)என்பதும் தெரிய வந்தது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். பஸ் நிலையத்துக்குள்அரசு பஸ் தாறுமாறாக ஓடி உயிரிழப்பு ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0





