பிறந்தநாள் கொண்டாடிவிட்டு திரும்பியபோது பரிதாபம் .கோவை அக்டோபர் 25 தஞ்சாவூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஹரிஷ் ( வயது 21 )பிரகாஷ் ( வயது 22)திருச்சியை சேர்ந்தவர் சபா (வயது 23) இவர்கள் கோவை தெலுங்கு பாளையம் பகுதியில் உள்ள வாகனங்களை சுத்தம் செய்யும் ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வந்தனர்.. தஞ்சாவூரை சேர்ந்த பிரபாகரன் (வயது 23) அரியலூர் சேர்ந்தவர் அகத்தியன் ( வயது 21) இவர்கள் இருவரும் கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் 3-ம் ஆண்டு படித்து வந்தனர். இந்த 5பேரும் நண்பர்கள் ஆவார்கள். இவர்கள் அடிக்கடி சந்தித்து பேசிக் கொள்வதுடன்5 பேரும் காரில் ஆலாந்துறை மற்றும் இருட்டுபள்ளம் பகுதியில் உள்ள ஓட்டலுக்கு சென்று சாப்பிடுவது வழக்கம். இந்த நிலையில் ஹரிசுக்கு நேற்று பிறந்தநாள் ஆகும்.எனவே ஹரிஷ் மற்றும் நண்பர்கள் என 5 பேரும் சேர்ந்து பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடினர் .அந்த 5 பேரும் நேற்று இரவு 10 மணி அளவில் காரில் கோவை சிறுவாணி ரோட்டில் உள்ள இருட்டு பள்ளம்பகுதியில் இருக்கும் ஓட்டலுக்கு சென்றனர். காரைஹரிஷ் ஓட்டினார். மீதமுள்ள 4 பேரும் காரில் இருந்தனர் இரவு நேரம் என்பதால் பேரூர் சிறுவாணி ரோட்டில் வாகனங்கள் குறைவாகவே செல்லும். இதனால் அந்த கார் அதிவேகமாக சென்றது. பேரூர் செட்டிபாளையத்தை அடுத்த பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது கார் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் அந்த கார் தாறுமாறாக ஓடி சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தில் பயங்கர சத்தத்துடன் மோதியது.. இந்த மோதலில் கார் அப்பளம் போல நொறுங்கியது இதனால் காருக்குள் இருந்த ஹரிஷ், பிரகாஷ், சபா, மற்றும் அகத்தியன் ஆகிய 4 பேரும் உடல் நசங்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர்.படுகாயம் அடைந்த மாணவர் பிரபாகரன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இது குறித்த தகவல் அறிந்ததும் பேரூர் போலீஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரபாகரனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து உயிரிழந்த ஹரிஷ் உட்பட 4 பேரின்உடல்களும் மீட்க பட்டு பிரேத பரிசோதனைக்காககோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றது தான் இந்த விபத்துக்குகாரணம் என்று கூறப்படுகிறது. இது குறித்து பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக நண்பர்கள் காரில் சென்றபோது விபத்தில் சிக்கி 4 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0





