திருமணம் செய்து வைக்கக் கோரி காதலி வீட்டின் முன் ரகளை செய்த காதலன்கைது

கோவை அக்டோபர் 22 கோவை புலியகுளம், ஏரி மேடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் ( வயது 20 )இவர் அவரது வீட்டின் அருகே வசித்து வந்த ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதை அறிந்த அந்த இளம் பெண்ணின் பெற்றோர் வேறு பகுதிக்கு சென்றனர். இந்த நிலையில் ராஜேஷ் அந்த இளம் பெண்ணின் வீட்டின் முன்பு நேற்று நின்று கொண்டு தன் காதலியைதனக்கு திருமணம் செய்து கொடுக்கவில்லை என்றால் கத்தியால் குத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டினாராம்.அத்துடன் அங்கிருந்த மோட்டார் சைக்கிளுக்கும் தீவைத்தார். இதுகுறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காதலன் ராஜேசை கைது செய்தனர்..