பஸ்சில் பயணம் செய்த மூதாட்டியிடம் 2 பவுன் செயின் நூதன மோசடி

பெண்ணுக்கு வலை.கோவை செப்டம்பர் 9 கோவை அருகே உள்ள நீலி கோணாம் பாளையம், சக்தி நகரை சேர்ந்தவர் சண்முகம் இவரது மனைவி லட்சுமி (வயது 73 ) இவர் சூலூரில் தனது இளைய மகளுடன் வசித்து வருகிறார் நேற்று திருப்பூரில் இருந்து கோவைக்கு தனியார் பஸ்சில் வந்து கொண்டிருந்தார் அவரது பக்கத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அமர்ந்திருந்தார். அவர் மூதாட்டியிடம் உங்கள் செயின் விழும் தருவாயில் உள்ளது .அதை கழட்டிபைக்குள்போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறினார் அவருக்கு உதவி செய்வது போல நடித்தார். மூதாட்டி லட்சுமி ராமநாதபுரம் பஸ் ஸ்டாப்பில் வந்து இறங்கும் போது அவரது பர்சை திறந்து பார்த்தார் .அதில் செயின் இல்லை. அருகில் பயணம் செய்த அந்த பெண் செயினை பர்சில் போடுவது போல நடித்து மோசடி செய்து விட்டார் .இது குறித்து லட்சுமி ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணை தேடி வருகிறார்கள்.