பரபரப்பு வாக்குமூலம்.கோவை செப்டம்பர் 23கோவை சுந்தராபுரம்,சிட்கோ சர்வீஸ் ரோட்டில் உள்ள கால்வாயில் நேற்று முன்தினம் சாக்கு முட்டையில் ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து சுந்தராபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கபட்டது அழுகிய நிலையில் கிடந்த உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர் .பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பிணமாக கிடைத்தது மதுக்கரை அருகே உள்ள சீராப்பாளையத்தை சேர்ந்த பாலுசாமி ( வயது 40) என்பது தெரியவந்தது.இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார் .கடந்த 11 -ஆம் தேதி வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு புறப்பட்டு சென்ற பாலுச்சாமி அதன் பிறகு வீடு திரும்பவில்லை பல இடங்களில் பாலுசாமியின் மனைவி பரமேஸ்வரி அவரை தேடி பார்த்து உள்ளார் .ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து கடந்த 14 ‘ஆம் தேதி தனது கணவர் பாலுசாமியைகாணவில்லை என்றும் அவரை கண்டுபிடித்து தருமாறு மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார் .மதுக்கரை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் அவரை கொலை செய்து சிலர் சாக்கு முட்டையில் கட்டி சாக்கடை கால்வாயில் வீசியிருப்பதுதெரியவந்தது.போலீஸ் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ஆடு வியாபாரியான மகாலிங்கம் ( வயது 55) என்பவரும் பாலுசாமி நண்பர்கள் . கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலுசாமியிடம் மகாலிங்கம் ரூ20 ஆயிரம் வட்டிக்கு கடன் வாங்கினார் .அதற்கு அவர் வட்டி சரியாக கொடுக்கவில்லை. பணத்தை திரும்ப கேட்டபோது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மகாலிங்கம் கல்லால் தாக்கி பழனிசாமி கொலை செய்தது தெரியவந்தது. இதற்கு அதே பகுதியை சேர்ந்த மோகனா (வயது 40) என்பவரும் உடந்தையாக இருந்தார். இதனால் போலீசார் இருவரையும் கைது செய்தனர்..கொலை நடந்தது எப்படி ?என்பது குறித்து அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: வட்டிக்கு கடன் வாங்கிய மகாலிங்கம் வட்டி பணத்தை பாலுசாமியிடம் கொடுக்கவில்லை இது தொடர்பாக பலமுறை பணத்தை கேட்டும் அவர் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார் இந்த நிலையில் கடந்த 11-ஆம் தேதி மகாலிங்கத்தை தொடர்பு கொண்ட பாலுசாமி பணத்தை எப்போது கொடுப்பாய்? என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் வட்டியுடன் சேர்த்து அசலையும் கொடுத்து விடுகிறேன் சுந்தராபுரம் அருகே உள்ள எனது வீட்டுக்கு வா என்று அழைத்துள்ளார் அங்கு அவர் சென்றதும் பணத்தை கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது கொடுத்த பணத்தை திரும்ப கேட்டதால் ஆத்திரமடைந்த மகாலிங்கம் அங்கு கிடந்த கல்லை எடுத்து பாலுசாமியின் தலையில் ஓங்கி அடித்து கொலை செய்துள்ளார் .பின்னர் மகாலிங்கம் மோகனா ஆகியோர் சேர்ந்து அவரது உடலை சாக்கு முட்டையில் போட்டு கட்டி கால்வாயில் வீசி சென்று உள்ளனர்.. இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியுள்ளனர்.இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0





