கோவை அக்டோபர் 18 கோவை ஆர் .எஸ் . புரம் .போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்து நேற்று அங்குள்ள சர். சண்முகம் ரோட்டில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது ஒரு பேக்கரியில் சட்ட விரோதமாக சிகரெட் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சிவகங்கை மாவட்டம் மாணிக்கம் (வயது 39 )கைது செய்யப்பட்டார். அங்கிருந்த ஏராளமான சிகரெட்டு பாக்கெட்டுகள் பறிமுதல்செய்யப்பட்டது.






