கோவை ரெயிலில் கேட்பாரற்று கிடந்த 16 கிலோ கஞ்சா சிக்கியது

கோவை அக்டோபர் 10
கோவை உட்கோட்ட போதை பொருள் தடுப்பு பிரிவுசிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்சுப்பிரமணி, ஏட்டு ராஜலிங்கம்
போலீஸ்காரர்கள்யுவராஜ் ,சையது முகமதுஆகியோர் திருப்பூர் முதல் கோவை வரை ரயில்களில் சட்டவிரோத பொருட்கள் ஏதேனும் கடத்தப்படுகிறதா? என்று கண்காணித்து வந்தனர்.இந்த நிலையில் திப்பூர்கரில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் விரைவு ரெயிலில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது பொதுசனப்பெட்டியில் கேட்பாரற்று இருந்த சுமார் 16.கிலோஎடை கொண்ட கஞ்சாவை கைப்பற்றி கோயமுத்தூர் இருப்புப் பாதை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் . மேற்படி கஞ்சா மேல் விசாரணைக்காக கோவை மாநகர (என். ஐ.பி.சி.ஐ.டி)போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.