ஆட்சியில் பங்கு கேட்பதன் மூலம் கூட்டணி இடையே விரிசல் ஏற்பட ஆரம்பித்துள்ளது தெளிவாக தெரிகிறது- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி!

நீலகிரி:
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.இதன் ஒரு பகுதியாக நேற்று நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் குன்னூரில் மக்கள் மத்தியில் அவர் பேசுகையில்
திமுக ஆட்சிக்கு வந்து நீலகிரி தொகுதிக்கு ஏதாவது செய்துள்ளாரா? என கேள்வி எழுப்பியவர் அதிமுக ஆட்சியின் போது ரூ.400 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமான, நவீன அறுவை சிகிச்சைகளுடன் மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்தது எனவும் ஆனால் திமுக அதனை திறந்து வைத்துவிட்டு அவர்கள் செய்தது போல் காண்பித்துள்ளதாக பேசியவர் இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் பிரசித்தி பெற்ற நகரம் ஊட்டி. திமுக ஆட்சி பதவி ஏற்றவுடன் நீதிமன்ற உத்தரவு என்ற பெயரில் குறிப்பிட்ட அளவிலேயே வாகனங்கள் வருவதற்கு இ-பாஸ் நடைமுறையை கொண்டு வந்த காரணமாக வியாபாரிகளுக்கு வருவாய் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிமுக ஆட்சி அமைந்த உடன் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களை வைத்து இ-பாஸ் நடைமுறை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.பசுந் தேயிலைக்கு அதிமுக ஆட்சியில் தான் மானியம் வழங்கப்பட்டது எனவும்
படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசிடம் பரிந்துரை செய்யப்படும் என்றார்.அதிமுக ஆட்சியில் பொங்கல் தொகுப்பு 2500 ரூபாய் வழங்கப்பட்டது எனவும் திமுக ஆட்சியில் 21 பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில் முறையாக ஏழை எளிய மக்களுக்கு வழங்காமல் அதிலும் ஊழல் செய்தது திமுக அரசு என குற்றம் சாட்டினார்.
கட்டுமான பொருட்கள் விலை உயர்வு காரணமாக வீடுகளை கனவில் தான் கட்டி மகிழ்ந்து கொள்ள முடியும் நிஜத்தில் வீடு கட்ட முடியாது என்றவர் திமுக ஆட்சியில் ஒரு யூனிட் எம் சாண்ட் 5500 ரூபாய்க்கும் ஒரு யூனிட் ஜல்லி 4500 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் கல்குவாரி உரிமையாளர்களை திமுகவினர் மிரட்டி வருகின்றனர் என்றார்.மேலும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன்
நீலகிரி மாவட்ட தேயிலை மற்றும் மலைத்தோட்ட காய்கறிகளை பயிரிடும் விவசாயிகள் தொழிலாளர்கள்,ஏழை எளிய மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்றவர் இது அதிமுகவின் தேர்தல் அறிக்கையாக சேர்க்கப்படும் என உறுதி அளித்தார்.
அதிமுக ஆட்சியின்போது 52 லட்சத்து 35 ஆயிரவாக்குறுதிகளை மாணவர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மடிக்கணினிகளை திறமையான மாணவர்களாக உயர்த்த அதிமுக வழங்கிய நிலையில் திமுக அரசு அதனை நிறுத்திவிட்டது என்றார்.
ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு
அதிக கடன் வாங்கும் மாநிலமாக தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது எனவும் கடன் வாங்குவதற்காகவே குழு அமைத்தது திமுக அரசு.‌
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக வாங்கிய கடன்களை மக்கள் நாம்தான் கட்ட வேண்டும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் எனவும்திமுக,
அதிமுக என மாறி மாறி 73 ஆண்டுகள் ஆட்சிகள் நடந்துள்ளது
அப்போது மொத்த கடனாக 5.18 லட்சம் கோடி இருந்து வந்த நிலையில் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பின் நான்கு ஆண்டுகளில் 5.32 லட்சம் கோடியாக கடன் உயர்ந்துள்ளது எனவும் கடனைப் பெற்று மக்களை கடனாளியாக மாற்றியது திமுக அரசு தான் என்றார்.
நெல்லையில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதிக்கு பாதி காங்கிரஸுக்கு 117 சீட்டுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் ஆட்சியில் பங்கு வேண்டும் என மாநில பொறுப்பாளர் கிரீஸ் கேட்டுள்ளார்.
இதன் காரணமாக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு உள்ளது எனவும் திமுக கூடாரம் இதனால் காலியாக போவதாக பேசினார். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு தாய்மார்களுக்கு சேலை வழங்கப்படும் என்றும் புதிய ஆட்டோக்கள் வாங்குபவர்களுக்கு 75 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றார்.
தொழில் முதலீட்டு வெளிநாட்டு பயணத்தில் 77 சதவீதம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.32 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என கூறுவது உண்மையா? எனவும் ஜெர்மனிக்கு தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக செல்லாமல் தொழில் முதலீடு செய்வதற்காக ஸ்டாலின் ஜெர்மனி சென்றதாக குற்றம் சாட்டினார்.2 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலையம்,
பச்சை தேயிலுக்கு கூடுதலாக 2 ரூபாய் கேத்தி பிரகாசபுரம், அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகள், பழங்குடியினர் பண்பாட்டு மையம் ஊட்டியில் கூடுதல் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் என அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்டது என்றவர் திமுக பல்வேறு வாக்குறுதிகளை அளித்து எதையும் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகவதாகவும் இதனை கண்டித்து அதிமுக தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது என்றவர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு வாக்களித்து பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார்.பரப்புரைக்கு பின்னர் தனியார் நட்சத்திர ஓட்டலில் நீலகிரி மாவட்ட சமுதாய தலைவர்கள், வியாபாரிகள், விவசாயிகள், கட்டுமான பொறியாளர்கள் உள்பட 21 சங்க பிரதிநிதிகளுடன் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துரையாடினார்.அப்போது கூட்டத்தில் பங்கேற்றவர்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பசுந்தயிலைக்கு விலை இல்லாதது, கூட்டு பட்டா பிரச்சனை, இ-பாஸ் உள்பட பல்வேறு பிரச்சினைகளை குறித்து கூறினர் மேலும் உள்ளூர் பிரச்சனைகள் குறித்து கூறியவர்கள் கோரிக்கை கோரிக்கை மனுக்களை எடப்பாடி பழனிச்சாமியிடம் வழங்கினர். இதனை தொடர்ந்து
எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில்
அதிமுக ஆட்சியில் பசுந்தேயிலைக்கு 2 ரூபாய் வழங்கப்பட்டது எனவும் தற்போது இந்த மானியம் நிறுத்தப்பட்டு உள்ளது. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் பசுந்தேயிலைக்கு மானியம் வழங்கவும், கூடுதல் விலை கிடைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
கூட்டு பட்டாக்கள் வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது எனவும் அதனை சரி செய்து தனிப்பட்ட வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் ஈழுவா தீயா ஜாதி சான்றிதழ் கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டதாகவும் தற்போது ஜாதி சான்றிதழ் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.அதிமுக ஆட்சி பெறுப்பேற்ற உடன் ஈழுவா சமுதாயத்தினர் ஓபிசி சான்றிதழ் வழங்க மத்திய அரசிடம் பரிந்துரை செய்யப்படும் என்றார்.
ஊட்டி சுற்றுலா தளத்தை மேலும் மேம்படுத்தவும், இ-பாஸ் நடைமுறை தடுக்க மேல்முறையீடு செய்யப்படும் என்றார்.
நகராட்சி கடைகள் இடிக்கப்பட்டு தற்போது தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.அங்கு தண்ணீர் தேங்குவதால் வியாபாரிகள் பாதிப்படைந்து வருகின்றனர். அதிமுக ஆட்சி பொறுப்பேற்று பிறகு வியாபாரிகளுக்கு ஏற்ற நல்ல இடத்தில் கடைகள் அமைத்து தரப்படும் என்றார்.
நீலகிரியில்
வீடுகள் கட்ட உரிய அனுமதி கிடைப்பது இல்லை எனவும்
10 ஆயிரம் மனுக்கள் நிலுவையில் உள்ளதாகவும்
அனுமதி கிடைக்காததால் பலர் பாதிப்படைந்து உள்ளதாக இதற்கு தீர்வு காணப்படும் என்றவர் வன விலங்குகளால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களுக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. அதனை உயர்த்த கோரிக்கை வைத்துள்ளீர்கள் இதனை 15 லட்சமாக உயர்த்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
கூடலூரில் பத்தாயிரம் குடும்பத்திற்கு மின்சார இணைப்பு இல்லை என கூறியுள்ளீர்கள் அதிமுக அரசு அமைந்தவுடன் பரிசீலனை மேற்கொண்டு
உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் செக்சன் 17 நிலம் பிரச்சனை நீதிமன்றத்தில் உள்ளது இந்த பிரச்சினை மக்களுக்கு சாதகமாக அமைய சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறினார்.இந்த கூட்டத்தின்போது முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, புத்திசந்திரன் செ.ம. வேலுச்சாமி, மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத், உள்பட பலர் உடன் இருந்தனர்.