ஜெராக்ஸ் கடையில்நள்ளிரவில் . தீ விபத்து

கோவை அக்டோபர் 6 கோவைப்புதூர் ஸ்ரீராமன் பிளாசாவை சேர்ந்தவர் லோகநாதன் ( வயது 50)இவர் அங்கு ஆவின் பூத் ,ஜெராக்ஸ் மற்றும் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவர்இரவில் கடையை பூட்டிவிட்டுவீட்டுக்கு சென்று விட்டார் .நள்ளிரவில் கடையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது அக்கம்,.பக்கம் உள்ளவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.. தீயணைப்பு படையினர்விரைந்து வந்து தீயைணைத்தனர் இதில் கடையில் இருந்த ஜெராக்ஸ் மிஷின், கம்ப்யூட்டர் பார்ட்ஸ் ,ஆடைகள் எரிந்து சேதமடைந்தது.தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து குனியமுத்தூர் போலீசில்லோகநாதன் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.