அண்ணியை தாக்கி நகை – பணம் பறித்த அண்ணன் தம்பி கைது

கோவை செப்டம்பர் 9 கோவை கவுண்டம்பாளையம்,குமரன் நகர், பிரிக்கால் காலனியை சேர்ந்தவர்கணேசன் இவரது மனைவி சந்தியா ( வயது 36) இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் சந்தியா நேற்று கடைக்கு போய் விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார் அப்போது அவரது கணவரின் மூத்தஅண்ணன் மகன்களானசாய்பாபா காலனி ,கே.கே. நகர் ஜீவா நகரை சேர்ந்த மதன் என்ற அட்டு மதன் (வயது 27)அவரது தம்பி மாதவன் என்ற தக்காளி மாதவன் ( வயது 25)ஆகியோர் குடிபோதையில் இருச இருசக்கர வாகனத்தில் வந்தனர். அவர்கள் சந்தியாவிடம் மது குடிக்க ரூ 1000 கேட்டனர் .அவர் கொடுக்க மறுத்தார். இதனால் மதன்,அவரது தம்பி மாதவன் சந்தியாவை கத்தியை காட்டி மிரட்டினர். உடனே சந்தியா தனது கணவரை உதவிக்கு வருமாறு அழைத்தார். அப்போது மதன் என்ற அட்டு மதன் சந்தியா கழுத்தில் கிடந்த வெள்ளி செயின், பணம் ரூ. 300ஆகியவற்றை பறித்துவிட்டு தப்பிச் சென்று விட்டனர்.இதுகுறித்து சந்தியா கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி வழக்கு பதிவு செய்து மதன் என்ற அட்டு மதன் அவரது தம்பி மாதவன் என்ற தக்காளி மாதவன் ஆகியோரை நேற்று மாலை கைது செய்தார் .இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.