போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் திறந்து வைத்தார்.கோவை செப்டம்பர் 8கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய எல்லைக்குள் அமைந்துள்ள கோபாலபுரத்தில் புதிய சோதனைச்சாவடிதொடங்கப்பட்டுள்ளது.இதை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் .கார்த்திகேயன் நேற்று திறந்து வைத்தார்..
இந்த நிகழ்ச்சியில் உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்ரிஷ்டி சிங் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் .சந்திரலேகா மற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
மேலும்,கேரள நோக்கிச் செல்லும் முக்கியச் சாலையில் அமைந்துள்ள இந்த சோதனைச்சாவடி, குற்றத் தடுப்பு மற்றும் சட்டவிரோதக் கடத்தல்களைத் தடுக்க முக்கிய பங்காற்றும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்டாக்டர் .கார்த்திகேயன் தெரிவித்தார். மேலும், இந்த சோதனைச்சாவடியை மேம்படுத்துவதில் முக்கிய பணியாற்றிய பொள்ளாச்சி உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும் பொள்ளாச்சி தாலுகா காவல் ஆய்வாளர் ஆகியோர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்பாராட்டினார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0