.கோவை அக் 29 கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு. சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப்பெருமானின் 7-வது படை வீடாக முருக பக்தர்களால் போற்றப்படுகிறது. இங்கு கந்த சஷ்டி விழா கடந்த 22-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது .நேற்று முன்தினம் சூரசம்கஹாரம் நடைபெற்றது .நேற்று காலை 5மணிக்குநடை திறக்கப்பட்டது. முதலில் கோ பூஜை, காலை 8 – 30 மணிக்கு யாகசாலையில் கலச தீர்த்தங்களை கொண்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9 மணிக்கு விநாயகர் பூஜை ,புண்யாகம் கலசங்கள் ஆவாகனம் வேள்வி பூஜை நடைபெற்றது.. திருக்கல்யாணத்தையொட்டி ஆதிமூலஸ் தானத்தில் உள்ள திருக் கல்யாண மண்டபம் வாழை, மா இலை தோரணங்கள்,தென்னம்பாளை ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்தது .மேலும் கோவில் முழுவதும் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு சுப்ரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் மணவறை ஊஞ்சலில் எழுந்தருளினார். சுவாமி வெண்பட்டு உடுத்தியும் ,வள்ளி பச்சை பட்டு உடுத்தியும், தெய்வானை சிவப்புப் ட்டு உடுத்தியும் தங்க நகைகள் அணிந்து மணமேடையில் காட்சி அளித்தனர்: பின்னர் சுவாமிக்கும் வள்ளி – தெய்வானைக்கும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது .அதை தொடர்ந்து கணபதி வேள்வி , தாரை வார்த்த நிகழ்ச்சி நடந்தது சரியாக 11:20 மணிக்கு சுப்ரமணிய சுவாமி வள்ளி தெய்வானைதிருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது அங்கு குவிந்து இருந்த பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா என்று பக்தி கொண்டனர்.பெண் பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு வளையல் பிரசாதம் வழங்கப்பட்டது சிவாச்சாரிகள் உரலில் மஞ்சள் இடித்துஉடுக்கை அடிச்சு பொற்கெண்ண பாடலை தமிழில் பாடினர். மேலும் மருத தீர்த்தம் ஊற்றி மஞ்சளை வள்ளி தெய்வானைக்கு அணிவித்தனர்.இதை யடுத்து சுப்பிரமணியசாமி வள்ளி .தெய்வானையுடன் பூப்பல்லக்கில் திருவீதி உலா வந்தார் இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு நீண்ட வரிசையில் என்று சாமி தரிசனம் செய்தனர் .7 நாட்களாக கந்த சஷ்டி விரதம் இருந்த பக்தர்களுக்கு கோவில் சரரபில் பிரசாதம் வழங்கப்பட்டது அதை சாப்பிட்டு பக்தர்கள் தங்களது விரதத்தை முடித்துக் கொண்டனர் விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.இதே போல கோவை சுக்கிரவார்பேட்டையில் உள்ள அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சிநேற்று மாலையில் வெகு சிறப்பாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகபெருமானை தரிசித்தனர்.இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் பரமசிவன் அறங்காவலர்கள் மகேஸ்வரன், ராஜா, விஜயலட்சுமி , செயல் அலுவலர் பாலசுப்ரமணியம் ஆகியோர் செய்திருந்தனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0





