ரூ 72 லட்சம் தங்க நகை மோசடி .வடமாநிலவாலிபர்கள் 2 பேருக்கு வலை

கோவை செப்டம்பர் 9 கோவை சாமி ஐயர் புது வீதியைச் சேர்ந்தவர் நிர்மல் குமார் மண்டல் ( வயது 55) இவர் அங்குள்ள எம் .என். ஜி. வீதியில் நிர்மல் ஜுவல்லரி என்ற பெயரில் நகைகள் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவரிடம் மேற்கு வங்காளத்தை சேர்ந்த மானிக் துட்டா ( வயது 29) மேனேஜராக வேலை பார்த்து வந்தார்.இவர் நகைக் கடை அதிபர் நிர்மல் குமார் மண்டலிடம் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த டட்டன் டூலி என்பவரை அறிமுகம் செய்து வைத்தார்.நகைக் கடை சாவி மானிக் துட்டாவிடம் இருந்தது. இந்த நிலையில் நகைக்கடை அதிபர் நிர்மல் குமார் மண்டல் நகை பட்டறைக்கு சென்றபோது அங்கிருந்த நகை பெட்டி காணாமல் போனது தெரியவந்தது. அதில் 708.250கிராம் (88.5 பவுன்) தங்க நெக்லஸ்கள்இருந்தது. இந்த நகைகளுடன் மானேஜர் மானிக் துட்டா ,, டட்டன்டோலி ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர் .இதன் மதிப்பு ரூ.72 லட்சம் இருக்கும்.இதுகுறித்து நகை கடை நிர்மல் குமார் மண்டல் வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வருகிறார்.