கோவையில் வேன் மோதி மகனுடன் ஸ்கூட்டரில் சென்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிதாப சாவு

கோவை செப்டம்பர் 26கோவை தெற்கு பகுதி அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் பானுமதி ( வயது 52)சிங்காநல்லூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.இவர் இன்று காலையில் விருதுநகர்சென்று விட்டு பஸ்சில் சிங்காநல்லூர்பஸ் நிலையத்துக்கு அதிகாலை 4:30 மணிக்கு வந்தார்.அவரை பஸ் நிலையத்தில் இருந்து வீட்டுக்குஅழைத்து செல்வதற்காக அவரது மகன் சஜேஸ் நாராயணன் (வயது 21) ஸ்கூட்டரில் வந்தார். சிங்காநல்லூர் பஸ் நிலையம் அருகேகாமராஜர் ரோட்டில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக அரிசிமூட்டைகளை ஏற்றிக் கொண்டு வேகமாக வந்த ஈச்சர் வேன் அவரதுஸ்கூட்டர் மீது மோதியது. இதில் இன்ஸ்பெக்டர் பானுமதி படுகாயம் அடைந்தார்.ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார்…மகன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.இன்ஸ்பெக்டர் பானுமதி 2004 -ம்ஆண்டு காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர் ஆக பணியில் சேர்ந்தார்.இவரது சொந்த ஊர் விருதுநகர்.இவருக்குகணவரும்,சதீஷ் நாராயணன் என்ற மகனும் தான்யா ( வயது 19) என்றமகளும் உள்ளன.இவர்கள் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பொறியியல் படிப்பு படித்து வருகிறார்கள்.இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து வேன் டிரைவரை கைது செய்தனர். வேன் மோதி பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பலியான சம்பவம் கோவையில் பெரும்சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..