குடோனில்பணம் வைத்து சீட்டாட்டம்.

4 பேர் கைது.கோவை செப்டம்பர் 29கோவை சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள ஒரு குடோனில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக சுந்தரபுரம் போலீசுக்கு நேற்று இரவு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் கன்னையன், சப் இன்ஸ்பெக்டர்முத்துக்குமார் ஆகியோர்அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள்.அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடுவது கண்டுபிடிக்கப்பட்டது இது தொடர்பாக சுந்தராபுரம் வெங்கடாசலபதி நகரை சேர்ந்த மணி ( வயது 57 )மாச்சம் பாளையம் கார்த்திக் ( வயது 43) சரவணன் ( வயது 41)நரசிம்மபுரம் ராஜேந்திரன் (வயது 40) ஆகியோர் கைது செய்யப்படட்டனர். இவர்களிடம் இருந்து சீட்டு விளையாட பயன்படுத்தப்பட்ட ரூ 4, 500மற்றும் சீட்டுகள் பறி.முதல் செய்யப்பட்டது.