பட்டாசு கடை ஊழியருக்கு கத்திக்குத்து அண்ணன் -தம்பி கைது

கோவை அக்டோபர் 23 கோவை ராமநாதபுரம், ஒலம்பஸ் பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன் ( வயது 42) ஷேர் ஆட்டோ டிரைவர், இவர்தீபாவளிக்காக தற்காலிகமாக ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் தனது மாமா நடத்தி வந்த பட்டாசு கடையில் வேலை பார்த்து வந்தார்.தீபாவளி தினத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் பட்டாசு வாங்க வந்தார். ரூ.1000க்கு பட்டாசு வாங்கிவிட்டு ரூ 650 மட்டும் கொடுத்தார்..இந்த பணத்தை திருப்பி கேட்ட போதுதகராறு செய்தார். அவர் ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டை சேர்ந்த வினோத் (வயது 22) அவரது தம்பி (தனுஷ் வயது 20) ஆகியோருடன் சேர்ந்து வாசுதேவனை கத்தியால் குத்தினார்கள்.இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது .இது குறித்து இராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.சப் இன்ஸ்பெக்டர்பிரேம் தாஸ் வழக்கு பதிவு செய்து வினோத் ( வயது 22) அவரது தம்பி தனுஷ் (வயது 20) ஆகியோரை கைது செய்தார். அருண்குமார் தலைமறைவாகிவிட்டார். அவரை தேடி வருகிறார்கள்..