4 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை. கைப்பந்துபயிற்சியாளர் போக்சோவில் கைது

கோவை செப்டம்பர் 26 கோவை அருகே உள்ள சூலூர் எஸ். ஆர். எஸ். நகரை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 38) கபடி மற்றும் கைப்பந்து பயிற்சி மையம் நடத்தி வருகிறார் .அத்துடன் அவர் சூலூர் அருகே ஒரு அரசு பள்ளியில் மாணவிகளுக்கு கபடிமற்றும் கைப்பந்து பயிற்சி அளித்து வருகிறார். அவர் அந்த பள்ளியில் படித்துவரும் சில மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தாராம். இந்த நிலையில் அந்த பள்ளியில் படிக்கும் 4மாணவிகள் பள்ளியில் உள்ள மைதானத்தில் தனியாக இருந்தனர். அவர்களுக்கு பயிற்சி கொடுக்கிறேன் என்று அருண்குமார் அழைத்துச் சென்றார். பின்னர் அந்த 4மாணவிகளுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தாராம்.இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியையிடம்புகார் செய்தனர். இதைக் கேட்டு தலைமை ஆசிரியை அதிர்ச்சி அடைந்தார். அவர் அளித்த புகார் பேரில் கருமத்தம்பட்டி அனைத்துபெண்கள் போலீசார்போக்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் கபடி பயிற்சியாளர் அருண்குமார் பயிற்சி கொடுக்கிறேன் என்ற பெயரில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர் வேறு மாணவிகளுக்கு பாலில் தொல்லை கொடுத்துள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.