கோவை அரசு மருத்துவமனையில்அமரர் ஊர்தி வராததால் தாயாரின் உடலை சொந்த காரில் எடுத்துச் சென்றமகன்

கோவை ஆகஸ்ட் 6 நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்தவர் தேவி ( வயது 67)இவர் உடல்நல குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்குஅவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் இரவில் இறந்தார். இதையடுத்து அவரது உடல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டது. தேவியின் உடலை சொந்த ஊரான ஊட்டிக்கு கொண்டு சென்று நேற்று மாலை 5 மணிக்கு அடக்கம் செய்ய வேண்டும் என்று மகன் உட்பட உறவினர்கள் அரசு மருத்துவமனை நிர்வாகத்துடன் கோரிக்கை வைத்தனர் .கோவை அரசு மருத்துவமனையில் ஒருவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தால் தமிழக அரசின் இலவச அமரர் ஊர்தியில் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். இந்த நிலையில் தேவியின் உடலை ஏற்றி கொண்டு ஊட்டி செல்ல இலவச அமரர் ஊர்தி அனுப்புகிறோம் காத்திருங்கள் என்று மருத்துமனை ஊழியர்கள் தெரிவித்தனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அமரர் ஊர்தி வரவில்லை. தாயின் உடலை குறிப்பிட்ட நேரத்துக்குள்அடக்கம் செய்ய எடுத்துச் செல்ல முடியாதால் ஆத்திரமடைந்த அவரது மகன் மதியம் 2:30 மணி அளவில் தாயின் உடலை பிரேத பரிசோதனை அரங்கிலிருந்து வெளியே எடுத்து வந்து தான் கொண்டு வந்த காரில்ஏற்றினார்.பின்னர் ஊட்டி நோக்கி சென்றார். இதை பார்த்து அங்கு இருந்த காவலாளி மற்றும் பிரேத பரிசோதனை அரங்க ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை யடுத்து அவர்கள் போலீசாரின் உதவியுடன் அந்த காரை துரத்தி சென்றுமடக்கி பிடித்து பிரேத பரிசோதனை கூடத்துக்கு மீண்டும் கொண்டு வந்தனர். பின்னர் இலவச அமரர் ஊர்தியில் ஏற்றப்பட்டு ஊட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை கூடத்தில் இருந்து காரில் தனது தாயின் உடலை ஏற்றி சென்ற மகனை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவம் கோவை அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.