நீலகிரி மாவட்டம் உதகை லவ்டேல் லாரன்ஸ் பள்ளியில்,
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி அவர்கள்
தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா
தண்ணீரு இ.ஆ.ப., முன்னிலையில், மாநில அளவிலான அடைவு தேர்வு
தொடர்பாக பள்ளி தலைமையாசிரியர்களுடனான ஆய்வுக் கூட்டம்
(16.09.2025) நடைபெற்றது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள், நீலகிரி மாவட்டத்தில்
கற்றல் அடைவு திறன் அதிகரிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பள்ளி
தலைமையாசிரியர்களுடன் கலந்துரையாடினார்.
இக்கூட்டத்தில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள்
தெரிவித்ததாவது,நீலகிரி மாவட்டத்தில் அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு சென்று கல்வி
கற்பதை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். பள்ளி
குழந்தைகளின் மதிப்பெண்கள் அதிகரிக்க அனைத்து பாடப்பிரிவு ஆசிரியர்கள்
ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பள்ளி மாணவ, மாணவர்களிடையே நல்ல
பழக்க வழக்கங்களை ஆசிரியர்கள் தொடர்ந்து கற்று தர வேண்டும். ஆசிரியர்கள்
எளிதான முறையில் மாணவர்கள் கல்வி கற்க வகை செய்ய வேண்டும். நன்றாக
படித்து வந்தால் தான் சமுதாயத்தில் நல்லதொரு நிலைக்கு வர முடியும் என்பது
குறித்து அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவ,
மாணவர்களின் நலன்கருதி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்
பள்ளிக்கல்வித்துறை சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
அத்திட்டங்கள் சிறப்பான முறையில் செயல்பட ஆசிரியர்களாகிய நீங்கள்
உறுதுணையாக இருக்க வேண்டும். மேலும் தலைமையாசிரியர்களின் பணி என்பது
ஒரு உன்னதமான பணியாகும். அனைத்து மாணவர்களும் நல்ல மதிப்பெண் பெற்று
தேர்ச்சி பெற செய்வது தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கடமையாகும்
என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) நந்தகுமார்,
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (கோத்தகிரி) முதல்வர் (பொ)
முனைவர் சேகரன், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி)
சின்னமாது, உதவி திட்ட அலுவலர் அர்ஜீணன் மற்றும் பள்ளியின்
தலைமையாசிரியர்கள் பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்,

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0