முக்கிய ஆவணங்கள் சிக்கியது .கோவை செப்டம்பர் 24 திருப்பூர் மாவட்டம் உடுமலையை தலைமை இடமாக கொண்டு சுகுணா புட்ஸ் ( உணவு) நிறுவனம் செயல்பட்டு வருகிறது .இந்த நிறுவனத்தின் சுகுணா சிக்கன் பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம் உட்பட முக்கிய அலுவலங்கள்கோவையில் செயல்பட்டு வருகிறது .இந்த நிலையில் கோவை அவினாசி ரோட்டில் உள்ள சுகுணா புட்ஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம், ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சுகுணா குரூப் அலுவலகம் ஆகியவற்றில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். 9கார்களில் வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் 20 க்கு மேற்பட்டோர் அடங்கிய குழுவினர் 2 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டனர். வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் விற்பனைக்கு தகுந்தவாறு வரி செலுத்திய உள்ளார்களா? வரி ஏய்ப்பு எதுவும் நடைபெற்றுள்ளதா? என்பதை அறிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர். இது குறித்து வருமானத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பல்லடம் மெயின் ரோட்டில் உள்ள சுகுணா புட்ஸ் என்ற பெயரில் கோழி தீவனம் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது .அந்த நிறுவனத்துக்கு நேற்று காலை 11 மணிக்கு வருமானவரி துறை அதிகாரிகள் ஆணையர் பெர்னாண்டோ தலைமையில் சென்னை மற்றும் கோவையை சேர்ந்த 10 பேர் கொண்ட அதிகாரிகள் 3 காரில் வந்தனர்.அவர்கள் அங்குள்ள ஆவணங்கள் பதிவேடுகள் உள்ளிட்டவற்றை சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது முக்கியஆவணங்கள் சிக்கிஉள்ளதாக கூறப்படுகிறது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0





