கோவை மே 9,இந்தியா பாகிஸ்தான் போர் காரணமாக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள்,மற்றும் முக்கிய இடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் கோவை மாநகரில் போலீஸ் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது .போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் நகரில் 10 இடங்களில் திடீர் சோதனை சாவடிகள்அமைத்து விடிய, விடிய போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள்.பகலிலும் பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடந்தது.இது தவிர தனியார் தங்கும் விடுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது..

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0