ஏலக்காய் வியாபார நிறுவனம் நடத்தும் திமுக மாநில செயற்குழு உறுப்பினர் வீடு,அலுவலகம், குடோன் ஆகிய இடங்களில் அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 நாட்களாக நடத்திய சோதனை நிறைவடைந்தது.
தேனி மாவட்டம் போடியில், ஏலக்காய் வியாபார நிறுவனத்தை, திமுக மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர் நடத்தி வருகிறார்.வருமான ஏய்ப்பு தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக சோதனை மேற்கொண்டனர்.கடந்த 7 மாதத்தில் சங்கரின் நிறுவனத்தில், ரூ.1,200 கோடி மதிப்புள்ள ஏலக்காய் வர்த்தகம் நடந்ததாகவும், GST மற்றும் வரி ஏய்ப்பு நடந்ததாகவும், கம்பம்மெட்டு அருகே கேரளாவில் நடந்த சோதனையில் தெரியவந்தது.இதன் அடிப்படையில் சோதனை நடைபெற்றது.

போடி இரட்டை வாய்க்கால் அருகே உள்ள குடோன் பூட்டை உடைத்து அதிகாரிகள் உள்ளே நுழைந்தனர்; கேரளா, பெங்களூர், சென்னை என வெளி மாநிலங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள், மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை வீரர்கள் உதவியுடன் சோதனை நடத்தினர்.சங்கர் தொடர்புடைய இடங்கள், அவரது தொடர்பில் உள்ள முக்கிய பிரமுகர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.3 நாட்கள் நடத்தப்பட்ட சோதனை முடிவடைந்தது.ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள் அதனை மேல் விசாரணைக்காக எடுத்து சென்றனர்.







