எடப்பாடி யார் பிறந்த நாள்: ராமநாதபுரத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் அதிமுகவினர் ரத்த தானம்..!

ராமநாதபுரத்தில் விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு ஏற்பாட்டில் மகளிர் அணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி, மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி ஆகியோர் தலைமையில் அண்ணா தொழிற்சங்கம் மற்றும் அதிமுக மருத்துவர் அணி சார்பில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.முன்னதாக, அதிமுக நிறுவனர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து, பாகிஸ்தான் நடத்திய தாக்குதலின்போது வீர மரணமடைந்த எல்லை பாதுகாப்புப்படை வீரர் முரளி நாயக் படத்திற்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணக்குமார் குருதிக்கொடை கொடுத்து முகாமை தொடங்கி வைத்தார்.இதில் 300 க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.இந்நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் மருதுபாண்டியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் நகர் கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்