மருதமலை பஸ் நிலையத்தில் முதியவர் பிணம்

கோவை ஜூலை 9 கோவை அருகே உள்ள மருதமலை அடிவாரத்தில் உள்ள பஸ் நிலையத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 65 வயது இருக்கும்.அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து வடவள்ளிபோலீசில் சோமையம்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி கட்டதுரை புகார் செய்தார். போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.