முதியவர் வீட்டில் நகை – பணம் கொள்ளை

கோவை ஜூலை 11 கோவைப்புதூரை சேர்ந்தவர் சாமுவேல்ராஜ். ( வயது 75) இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.நேற்று அவரது மனைவிகதவை திறந்து போட்டுவிட்டு பாத்ரூம் சென்றிருந்தார். அப்போது யாரோ வீட்டினுள்புகுந்து பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகள், பணம் ரூ. 5 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். இது குறித்து சாமுவேல்ராஜ் குனியமுத்தூர் காவல் நிலையத்தில்புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் கஸ்தூரி சம்பவ இடத்திற்கு சென்றுவிசாரணை நடத்தினார் .இது தொடர்பாகவழக்கு பதிவு செய்துகொள்ளையர்களை தேடி வருகிறார்.