மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் சாவு

கோவை ஜூலை 7 கோவை பீளமேடு பக்கம் உள்ள வீரியம் பாளையம் ,பட்டேல் வீதியை சேர்ந்தவர் துரைசாமி . இவரது மகன் வினோத்குமார் ( வயது 28) எலக்ட்ரிசியன் .இவர் நேற்று அவரது வீட்டில் உள்ள யு.பி.எஸ் யூனிட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். -சிகிச்சைக்காகஅங்குள்ள தனியார்மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் வழியில் அவர் இறந்துவிட்டார் இது குறித்து அவரது மனைவி காவியா பீளமேடு போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் சுபாஷினி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.