போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் ஏற்பாடு. கோவை ஆகஸ்ட் 6 கோவை மாநகர பகுதியில் குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அத்துடன் 24 மணி நேர ரோந்து திட்டமும் தொடங்கப்பட்டுள்ளதால் தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது .இது தவிர பெண்கள் மற்றும் பள்ளி கல்லூரி, மாணவிகள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை அரசு மகளிர் கல்லூரி அருகே பஸ் நிறுத்தத்தில் மாதிரி அடிப்படையில் அவசரகால தொடர்பு வசதி வைக்கப்பட்டுள்ளது. இதில் கண்காணிப்பு கேமராவும் ,ஒரு பட்டனும் வைக்கப்பட்டிருக்கிறது .அவசர காலத்தில் அந்த பட்டனை அழுத்தினால் உடனடியாக மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்துவிடும். அதில் இருக்கும் கண்காணிப்பு கேமரா மூலம் அங்கு நடப்பதை தெரிந்து கொள்ளும் போலீசார் உடனே அங்கு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் அனுப்பி வைப்பார்கள். இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே மாநகர பகுதியில் உள்ள அனைத்து பஸ் நிறுத்தத்திலும் இதுபோன்ற வசதி ஏற்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டது. அதில் முதல் கட்டமாக கல்லூரிகள் அருகே உள்ள பஸ் ஸ்டாப்பில் இந்த வசதி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் கூறியதாவது:- பஸ் நிறுத்தத்தில் கண்காணிப்பு கேமராவுடன் கூடிய அவசரகால தொடர்பு வசதி வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவது பொது மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறது ..இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது .எனவே இந்த வசதியை விரிவுபடுத்தும் வகையில் கோவை மாநகர பகுதியில் கல்லூரிகளை ஒட்டி இருக்கும் 40பஸ் ஸ்டாப்பில் இந்த வசதியை தொடங்க உள்ளோம் .விரைவில் அதற்கான பணிகள் தொடங்க உள்ளது .அவசரகால தொடர்பு வசதிகள், கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் அதன் மூலம் கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும். கல்லூரிகளை ஒட்டி உள்ள பஸ் நிறுத்தத்தில் வைத்து விட்டு அதன் பின்னர் பள்ளிகளை ஒட்டி இருக்கும் பஸ் நிறுத்தத்தில் வைக்கப்படும். தொடர்ந்து தனியார் நிறுவனங்கள் பெண்கள் அதிகமாக பயன்படுத்தும் பஸ் நிறுத்தத்திலும் வைக்கப்படும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0