இபிஎஸ் – பியூஷ் கோயல் சந்திப்பு..!!

மிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமனம் செய்யப்பட்டார். மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை நியமித்து பாஜக தேசிய தலைமை அறிவித்தது.

மத்திய இணை அமைச்சர்கள் இருவர் இணை பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டனர். அர்ஜுன் மேக்வால், முரளிதர் மோஹால் ஆகியோர் இணை பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.

பியூஷ் கோயல் இந்தியாவின் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமாவார். 2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தல்களில் தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயல் இருந்துள்ளார். இந்த முறையும் தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பாஜக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில் பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வந்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. சுமார் 2 மணி நேரமாக நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையானது சென்னை எம் ஆர் சி நகரில் உள்ள லீலா பேலஸில் நடந்து முடிந்தது. அதிமுக பாஜக கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டுள்ளது.

இதனிடையே அதிமுக – பாஜக இடையிலான பேச்சு வார்த்தையின் போது அதிமுக தரப்பில் கே.பி முனுசாமி, தங்கமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். இதேபோல் பாஜக தரப்பில் எல்.முருகன், அரவிந்த் மேனன், அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்டோருடன் இருந்தனர். முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து முடிந்துள்ளது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமனம் செய்யப்பட்டார். மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை நியமித்து பாஜக தேசிய தலைமை அறிவித்தது. மத்திய இணை அமைச்சர்கள் இருவர் இணை பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டனர். அர்ஜுன் மேக்வால், முரளிதர் மோஹால் ஆகியோர் இணை பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.