மளிகை கடையில் இருந்த பெண்ணை சுத்தியலால் தாக்கி நகை கொள்ளையடித்த வழக்கில் 3 பேர் கைது

துப்பாக்கி – தோட்டாக்கள் பறிமுதல் கோவை செப்டம்பர் 2 கோவையை அடுத்த சூலூர் அருகே உள்ள சுகந்தி நகரை சேர்ந்தவர் மேரி ஜூலியா ( வயது 57) அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த வாரம் அந்த கடைக்கு மோட்டார் சைக்கிளில் 2 பேர் சிகரெட் வாங்குவது போல் நடித்து மேரி ஜூலியாவின்தலையில் சுத்தியலால் தாக்கி அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று விட்டனர். இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின் பேரில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர் மேலும் அந்த பகுதியில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் பீகாரரை சேர்ந்த விஜயகுமார் சாணி என்ற பிஜிலி (வயது 22) கரூரை சேர்ந்த குணசேகரன் ( வயது 62) என்பதும் இவர்கள்தான் மேரி ஜூலியாவின் தலையில் சுத்தியலால் தாக்கி நகையை பறித்துச் சென்றவர்கள் என்பதும் தெரியவந்தது .இதை யடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர் .தொடர்ந்து போலீசார் அந்த 2 பேர் வந்த மோட்டார் சைக்கிளில் சோதனை செய்தனர். அப்போது அதற்குள் ஒரு கைதுப்பாக்கியும், 18 தோட்டாக்களும் இருந்தன. அதை பார்த்த அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த கைதுப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். அது பிஜிலிக்கு சொந்தமான கைதுப்பாக்கி என்பதும் அன்னூரில் ஒருவரிடமிருந்து ரூ 45 ஆயிரத்துக்கு கைத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களைவாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்த துப்பாக் கியை விற்ற பீகாரைச் சேர்ந்த சேர்ந்த விக்ரம் என்பவரையும்போலீசார்கைதுசெய்தனர்.தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.கொள்ளையர்களை கைது செய்து துப்பாக்கி தோட்டாக்களை பறிமுதல் செய்த தனிப்படையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் பாராட்டினார்.