மின்சாரம் தாக்கி விவசாயி மரணம்

கோவை மே 6 கோவை சூலூர் பக்கம் உள்ள பீடம்பள்ளி, மாகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மணி ( வயது 67) விவசாயி. இவர் நேற்று நடுப்பாளையத்தில் உள்ள தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்தார். அப்போது மின் மோட்டாரை இயக்கும்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார். இதுகுறித்து அவரது மகன் கார்த்திகேயன் சூலூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.