டாஸ்மாக் கடையில் கள்ள சந்தையில் மது விற்ற 2 பேர் கைது

.326 பாட்டில்கள் பறிமுதல் .கோவை செப்டம்பர் 23கோவை வெரைட்டிஹால் ரோடு போலீசார் தாமஸ் வீதி – கே.ஜி. வீதி சந்திப்பில் உள்ள டாஸ்மாக் கடை (எண் 17 11),பகுதியில் நேற்று நள்ளிரவில்திடீர் சோதனை நடத்தினார்கள்.அப்போது அங்கு மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக தஞ்சாவூர் அக்ரகாரம் ,பெரியார் வீதியைச் சேர்ந்த ரமேஷ் ( வயது 44) புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அசோக் குமார் ( வயது 43) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் பதுக்கி வைத்திருந்த 326 மது பாட்டில்களும் பணம் ரூ 1900 பறிமுதல் செய்யப்பட்டது ..