அதிகாரிகள் தகவல்.கோவை செப்டம்பர் 18 கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேற்கு புறவழிச் சாலை திட்டம் கடந்த 20 23-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 3 கட்டமாக இதற்கான திட்ட பணிகள் நடைபெறுகிறது. மொத்தம் 32.42கிலோமீட்டர் தொலைவிற்கு அமையும் இந்த 4 வழிச்சாலையில் முதல் கட்ட பகுதி பாலக்காடு ரோடு மைல்கல் பகுதியில் தொடங்கி மாதம்பட்டி வரை 11-80கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படுகிறது..இத்திட்ட பணிகள் குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது :-முதல் கட்டத்தில் 85 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது .மைல் கல் பகுதியில் பாலத்தின் பணிகள் பாக்கி உள்ளது. தார் சாலை அமைக்கும். பணிகள் 10 கிலோமீட்டர் தூரத்துக்கு நிறைவு பெற்றுள்ளது. முதல் கட்டத்திட்டத்தில் அனைத்து பணிகளும் அடுத்த மாதம் இறுதிக்குள் முடிந்துவிடும். இரண்டாம் கட்ட பணிகள் மாதம்பட்டி முதல் கணுவாய் வரை 12 – 30கிலோமீட்டர் தூரத்தில் அமைகிறது. இரண்டாம் கட்ட பணிகளுக்கு தேவைபடும் நிலங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட்டுள்ளது. 3-ம் கட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணியும் நிறைவடைந்துள்ளது.இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட திட்டங்களை மாநில அரசின் நெடுஞ்சாலைத்துறை ஆணையம் நிறைவேற்ற உள்ளது இரண்டாவது கட்ட திட்டத்தின் 12 – 10கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை மற்றும் பாலம் அமைக்கும் பணிகள் ரூ 320கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது இத்திட்டத்தின் கீழ் 3 மேம்பாலங்கள் தொண்டாமுத்தூர் சந்திப்பு ,பாரதியார் பல்கலைக்கழகம் அருகே மற்றும் பன்னிமடையில் அமைக்கப்படும். 2 -வதுகட்ட திட்ட பணிகள் விரைவில் தொடங்கும். 3 -வதுகட்ட திட்ட பணிகளும் 2027 -ம்ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0