பூட்டியவீட்டில் தீ விபத்து. ரூ 10 லட்சம் எரிந்து சேதம்

கோவை செப்டம்பர் 26 கோவை சித்தாபுதூர் ஆவாரம்பாளையம், சரோஜினி ரோட்டை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 54) எலக்ட்ரீசியன் . இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் இவர் தனதுதந்தை பெயரில் இருந்த15 சென்ட் நிலத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ 20 லட்சத்துக்கு விற்றார். அதில் ரூ 10 லட்சத்தை அவரது தாயார் மருத்துவ செலவுக்காக செலவழித்தார் . மீதி ரூ10 லட்சத்தைவீட்டில்பீரோவில் பத்திரமாக வைத்திருந்தார். நேற்று முன்தினம் இவரது வீட்டில் திடீரென்று தீ பிடித்தது .இதில்வீடு முழுவதும் எரிந்து நாசமானது. பீரோவில் இருந்துரு 5லட்சம் முழுவதுமாக எரிந்துநாசமானது. ரூ 5 லட்சம் மட்டும்புகையுடன் மீட்கப்பட்டது.. மேலும் வீட்டில் இருந்த மார்க் ஷீட், பான் கார்டு, ஆதார் கார்டு ,தந்தையின் இறப்பு சான்றிதழ் ஆகியவை எரிந்து சேதம் அடைந்தது. தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்…இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது..இன்ஸ்பெக்டர் கந்தசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.