நீலகிரி மாவட்டம் உதகை குட் ஷெப்பர்ட் இன்டர்நேஷனல் பள்ளியின் ஆண்டு நிறுவனர் தின விழாவில் நிறுவனம் தனது பெயர் கேட்ப மாணவர்களை கருணைஉள்ள தலைவர்களாக மாற்ற வழி காட்டுகிறது என்று விருந்தினர்கள் பாராட்டு,

நீலகிரி மாவட்டம் உதகை குட் ஷெப்பர்ட் இன்டர்நேஷனல் ஆண்டு நிறுவாணர் தின விழாவின் நிகழ்ச்சியை முன்னிட்டு
சிறப்பு விருந்தினராக வழக்கறிஞரும் விளையாட்டு ஆர்வலருமான நந்தன் காமத் கலந்து கொண்டார்,
ஜேக்கப் தாமஸ் (தலைவர்), சாரா ஜேக்கப் (மூத்த துணைத் தலைவர்), வினோத் சிங் (பள்ளித் தலைவர்) மற்றும் தீபா சுரேஷ் (தலைமை ஆசிரியை) ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.பல முக்கிய விருந்தினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பலர் விழா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விருந்தினர்களுக்கு பூச்செண்டுகள் வழங்கி சிறப்பித்தனர். விழா நிகழ்ச்சி தொடர்ச்சியாக குட் ஷெப்பர்ட் பள்ளியின் மாணவர்கள் அணிவகுப்பு இசைகுழு நிகழ்ச்சி , ஏரோபிக் ஜிம்னாஸ்டிக்ஸ், மலையேறும் திறமைகள், மற்றும் குதிரை சவாரி நிகழ்ச்சிகளை வெகு பிரம்மாண்டமாக செய்த மாணவர்களின் சிறப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது,
குட் ஷெப்பர்ட் இன்டர்நேஷனல் பள்ளியின் ஆண்டு நிறுவனரின் விழா நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த நந்தன்காமத் வழங்கிய உரையின் போது நந்தன் காமத்
அவர்களின் ஊக்கமளிக்கும் உரையுடன் இவர் ஒரு புகழ்பெற்ற வழக்கறிஞர்
மற்றும் விளையாட்டு தொழிலதிபர். தேசிய சட்டப் பள்ளி, ஆக்ஸ்ஃபோர்ட் மற்றும் ஹார்வர்ட்
பல்கலைக்கழகங்களில் பயின்ற தனது கல்வி
அனுபவத்தின் அடிப்படையில், தகுமை மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றலின் முக்கியத்துவத்தை
எடுத்துரைத்தார். சட்டம் மற்றும் விளையாட்டு
நிர்வாகத்தில் தனது அனுபவங்களைப் பகிர்ந்து,
சலுகையை ஒரு பொறுப்பாகவும் வாய்ப்பாகவும்
கருதுவது பற்றி பேசினார்.
காமத் உண்மையான வெற்றிக்கு அவசியமான
மூன்று குணங்களை வலியுறுத்தினார் – நேர்மை,
மரியாதை மற்றும் தகுமை. இவற்றை அபினவ் பிந்த்ரா,
ராஜர் பெடரர், ரஃபேல் நடால் மற்றும் விராட்
கோஹ்லியின் உதாரணங்கள் மூலம் விளக்கினார்.
இவற்றை சலுகையின் மருந்தாக விவரித்து,
தனிநபர்களை நம்பகத்தன்மையிலும்
நன்றியுணர்விலும் வேரூன்றச் செய்வதாகக் கூறினார்.
ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஜேன் குடால் ஆகியோரை
மேற்கோள் காட்டி, மாணவர்களுக்கு அனைவரின்
ஒன்றிணைவு மற்றும் நோக்கமுள்ள செயல்பாடு
அர்த்தமுள்ள மாற்றத்தைக் கொண்டு வரும் என்று
நினைவூட்டினார்.
அக்கறை, தொலைநோக்கு மற்றும் பொருந்தமான
சூழலை வளர்ப்பதற்காக குட் ஷெப்பர்ட்
இன்டர்நேஷனல் பள்ளியைப் பாராட்டினார். அந்த
நிறுவனம் உண்மையிலேயே தனது பெயருக்கு ஏற்ப
மாணவர்களை கருணையுள்ள தலைவர்களாக மாற்ற
வழிகாட்டுகிறது என்று உறுதிப்படுத்தினார், விழா நிகழ்ச்சி நிறைவாக சிறப்பு விருந்தினராக வருகை தந்த
வழக்கறிஞரும் விளையாட்டு
ஆர்வலருமான நந்தன்
காமத் பல்வேறு போட்டிகளிலும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்ட மாணவர்
மாணவர்களுக்கு கோப்பைகள்
மற்றும் பரிசுகளை சந்த்யா
குமார் வழங்கி பாராட்டினார்,