ரெயிலில் கடத்தி வந்த1640 போதை மாத்திரைகளுடன் கோவை வாலிபர்கைது

கோவை அக்டோபர் 17கோவை மாநகரபோலீஸ் கமிஷனர் சரவணசுந்தர், உத்தரவின்பேரில், துணை கமிஷனர் (தெற்கு) கார்த்திகேயன் மேற்பார்வையில்,
போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக சிறப்பு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சோதனையில், கோவை கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் (வயது 30) என்பவர் மீதான தகவல் அடிப்படையில், தெற்கு தனிப்படை மற்றும் கரும்புக்கடை காவல் நிலைய காவல்துறை இணைந்து செயல்பட்டு,நேற்று இவரை கைது செய்தனர்..
சோதனையில் இவரிடமிருந்து, 1640 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. இதன் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் இருக்கும்.
கைது செய்யப்பட்ட அப்பாஸ் மீது இதற்கு முன்பும் போதைப்பொருள் விற்பனை தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் இருந்தது.
இவர் புனே நகரத்திலிருந்து ரயிலில் போதை மாத்திரைகளை வாங்கி வந்து கோவை நகரில் விற்பனை செய்து வந்தார் என்பது விசாரணையில்தெரியவந்துள்ளது.
இவர்மீது கரும்புக்கடை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் அனுப்பப்பட்டுள்ளார்.
கோவை மாநகர காவல்துறை சார்பில், போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டில் ஈடுபடும் நபர்களின் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.